நியூசிலாந்தில் 5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் : வீடுகள் குலுங்கியதால் மக்கள் மத்தியில் அச்சம்

#world_news #Earthquake #Indonesia #2023 #Breakingnews
Mani
1 year ago
நியூசிலாந்தில் 5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் : வீடுகள் குலுங்கியதால் மக்கள் மத்தியில் அச்சம்

நியூசிலாந்தில் இன்று காலை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்து உடனடித் தகவல் ஏதும் வெளியாகவில்லை.

நியூசிலாந்தின் முக்கிய நகரமான கிறிஸ்ட்சர்ச்சில் இருந்து மேற்கே 124 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தென் மத்திய தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 11 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்க நிகழ்வு பல்வேறு இடங்களில் உணரப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் தேசிய அவசரகால மேலாண்மை நிறுவனம், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் இல்லை. மேலும், சேத அளவு குறித்து எந்த தகவலும் வரவில்லை. ஆனால், சுமார் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!