தேசிய ரீதியில் சாதனை படைத்த மடு கல்வி வலய மாணவி!

#SriLanka #Colombo #Mannar #Lanka4 #students #Tamilnews #sri lanka tamil news #Sports News
Kanimoli
2 years ago
தேசிய ரீதியில் சாதனை படைத்த மடு கல்வி வலய மாணவி!

கொழும்பில் பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட விளையாட்டு போட்டிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் தேசிய ரீதியில் இரண்டாம் இடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளளார்

 மடு கல்வி வலய மாணவி லக்சாயினி. இந்நிலையில் ரைகொண்டோ போட்டியில் முதன் முதலாக பங்குபற்றி மன்னார் மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மன்/ பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலயத்தின் மாணவியே குறித்த சாதனையை படைத்துள்ளார்.

 மன்/பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலய பாடசாலையின் விளையாட்டு வரலாற்றில் நீண்ட காலத்தின் பின் தேசிய மட்டத்தில் 2-ம் இடத்தைப் பெற்று வெள்ளி பதக்கத்தை தனதாக்கி கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் குறித்த சாதனையை படைத்து பாடசாலைக்கும், கிராமத்திற்கும், மடு கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்த மாணவிக்கு மன்/பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலய பாடசாலை சமூகம் தங்களது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!