நிட்டம்புவ நகரில் ATM இயந்திரத்தில் இருந்து 76 இலட்சம் பணம் திருட்டு
#SriLanka
#Police
#Investigation
#Robbery
Prathees
2 years ago
நிட்டம்புவ நகரிலுள்ள தனியார் வங்கி ஒன்றின் ATM இயந்திரம் உடைக்கப்பட்டு அதில் இருந்த எழுபத்தாறு இலட்சத்திற்கும் அதிகமான பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 16ஆம் திகதி இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
18ம் திகதி வங்கி பணிகள் துவங்கியதையடுத்து, டேலர் இயந்திரத்தில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிட்டம்புவ பொலிஸார், வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உட்பட பல அதிகாரிகளிடம் வாக்குமூலங்களைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளனர்.