குடியேற்றவாசிகளாக உள்வாங்கப்படுவோர் தொடர்பில் பிரான்ஸ் வெளியிட்டுள்ள தகவல்!

#SriLanka #France #immigration #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
குடியேற்றவாசிகளாக உள்வாங்கப்படுவோர் தொடர்பில் பிரான்ஸ் வெளியிட்டுள்ள தகவல்!

முறையற்ற வகையில் குடியேறியவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் என பிரான்ஸ் அறிவித்துள்ளது.

 அரசியல் ரீதியாக துன்புறுத்தல்களுக்கு உள்ளானவர்கள் மாத்திரமே நாட்டுக்குள் உள்வாங்கப்படுவார்கள் என பிரான்சின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

 அரசியல் ரீதியாக துன்புறுத்தல்களுக்கு உள்ளானவர்கள் மட்டுமே புகலிடம் கோருவதற்கு தகுதியானவர்களாக கருதப்படுவதாகவும் பிரான்ஸ் உள்விவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

 அவசியமற்ற வகையில் புகலிடம் கோருவோம் மீள அனுப்பிவைக்கப்படுவார்கள் எனவும் பிரான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 கடந்த வாரம் மத்திய தரைக்கடல் ஊடாக முறையற்ற வகையில் ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவின் லம்பேடுசா தீவிற்கு சுமார் 11.000 பேர் புலம்பெயர்ந்துள்ளனர். 

 இதன் காரணமாக லம்பேடுசா தீவில் நெருக்கடியானதொரு சூழ்நிலை ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!