முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் அழுகிய நிலையில் குடும்ப தலைவரின் சடலம் மீட்பு

#SriLanka #Death #Investigation #Mullaitivu #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Kanimoli
2 years ago
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் அழுகிய நிலையில் குடும்ப தலைவரின் சடலம் மீட்பு

புதுக்குடியிருப்பு பகுதியில் அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் நபரொருவர் கடந்த புதன்கிழமை காணாமல் போயிருந்த நிலையில் இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

 இந்நிலையில் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் தென்னம் காணியொன்றில் இருந்து துர்நார்ற்றம் வீசியமையால் குறித்த கிராமவாசியொருவர் சென்று பார்த்தவேளை அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் இருந்துள்ளது. அடையாளம் காணப்பட்ட குறித்த நபர் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதிய சேர்ந்த இராசலிங்கம் சுதர்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

 சம்பவ இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதிபதி எஸ்.கெங்காதரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி சுபுண் ஏக்கநாயக்க மற்றும் கிராம சேவையாளர் வே.மேகானந்தசிவம் ஆகியோர் சடலத்தை பார்வையிட்டுள்ளதுடன் தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் பரிசோதனைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டிருந்தார். 

தற்போது உடலம் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த நபரிற்கு அருகே பாட்டா ஒன்றும் அண்மித்த பகுதியில் சைக்கிள் ஒன்றும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4