அரச வருவாயை அதிகரிப்பதற்கான இலக்கை பூர்த்தி செய்யவில்லை: IMF
#SriLanka
#government
#IMF
Prathees
2 years ago
இலங்கையின் அரச வருவாயை அதிகரிப்பதற்கான இலக்கு திட்டத்தின் படி பூர்த்தி செய்யப்படவில்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை அவதானிக்க வந்த குழுவினர் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், கடந்த காலங்களில் மோசமான பொருளாதாரத்தில் இருந்து மீள்வதற்கு இலங்கை எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
ஆனால், அரசின் வருவாயைப் பெறுவதில் சில துறைகளின் மெதுவான தன்மையை அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான பிரதிநிதிகள் குழுவின் இரண்டாம் சுற்று முதல் கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற போது இது சுட்டிக்காட்டப்பட்டது.