உலகின் மிக உயரமான நாய் உயிரிழப்பு

#Death #WorldRecord #Surgery #Dog
Prasu
2 years ago
உலகின் மிக உயரமான நாய் உயிரிழப்பு

உலகில் மிக உயரமான நாய் என்ற உலக சாதனை படைத்திருந்த சியூஸ் நாய் உயிரிழந்துள்ளது.

கிரோட் டேன் ரகத்தை சேர்ந்த இந்த நாய்க்கு எலும்பில் ஏற்பட்ட புற்று நோய் காரணமாக அண்மையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சத்திர சிகிச்சையின் போது சியூஸின் முன்பக்க வலது கால் அகறற்ப்பட்டதுடன் சத்திர சிகிச்சைக்கு பின்னர் ஏற்பட்ட நிமோனியா காரணமாக உயிரிழந்துள்ளது.

மூன்று வயதான சியூஸ் எதிர்வரும் நவம்பர் மாதம் தனது நான்காவது பிறந்த நாளை கொண்டாடவிருந்தது.

சியூஸ் உலகில் உயரமான நாய் என்ற வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.

 அதனுடைய உயர் 4 அடி 5.18 அங்குலமாகும். அமெரிக்காவின் டெக்சாஸின் போர்ட்ஃபேர்ட் நகரில் வசிக்கும் தனது உரிமையாளரான பிரிட்னி டேவிஸ் என்பவரது மடியில் சியூஸ் தனது இறுதி மூச்சை விட்டதாக ஸ்கை செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4