சூட்கேஸில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன

#SriLanka #Death #Police #Investigation #Crime
Prathees
2 years ago
சூட்கேஸில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி, சூட்கேஸில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

 சடலம் நீல நிற சூட்கேஸில் வைக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த நபருடையது என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 நேற்று (15) மாலை சீதுவ பெல்லனவத்தை, கிண்டிகொட பிரதேசத்தில், தண்டுகங் ஓயா கரையோரத்தில் இனந்தெரியாத சடலம் ஒன்று வீசப்பட்டுள்ளது.

 உயிரிழந்தவர் 35 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட வயதுடைய 05 அடி 08 அங்குல உயரமும் சராசரியான உடலும் 02 அங்குல நீளமான முடியும் கொண்ட ஆண் என பொலிஸார் தெரிவித்தனர்.

 அவர் சிவப்பு சட்டை மற்றும் பழுப்பு நிற பேன்ட் அணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

 பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் உயிரிழந்தவரின் கழுத்தில் வலப்புறம் 07 நட்சத்திர அடையாளங்களுடன் பச்சை குத்தப்பட்டிருந்தமையும், தலை மற்றும் கன்னம் ஆகிய இருபுறங்களிலும் காயங்கள் காணப்பட்Lடுள்ளது.

 நீதவான் விசாரணைகளை மேற்கொண்டு சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!