ரஷ்யாவின் இராணுவ கப்பல்களை தாக்கி அழித்த உக்ரைன்!
#Russia
#Ukraine
#War
#Lanka4
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ரஷ்யாவின் இரண்டு வாசிலி பைகோவ் ரக ராணுவ கப்பல் மீது உக்ரைனிய ஆயுதப்படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் நாளுக்கு நாள் நீடித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் நேற்று (15.09) காலை ரஷ்யாவுக்கு சொந்தமான வாசிலி பைகோவ்(Vasily Bykov) ரக இராணுவ போர் கப்பல் மீது உக்ரைனிய ஆயுதப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
இதில் 2 வாசிலி பைகோவ் ரக ராணுவ போர் கப்பலும் பலத்த சேதமடைந்தது இருப்பதாக உக்ரைனிய விமானப்படையின் முலோபாய கட்டளை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் ரஷ்யாவின் இரண்டு வாசிலி பைகோவ் ரக ராணுவ போர் கப்பல்களை மறைமுகமாக உக்ரைன் தாக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.