இறைவன் படக்குழு அடுத்த அறிவிப்பு வெளியீடு

#India #Cinema #TamilCinema #2023
Mani
2 years ago
இறைவன் படக்குழு அடுத்த அறிவிப்பு வெளியீடு

இறைவன், ஜெயம் ரவி, அஹமத், ahmed'வாமனன், 'என்னென்றும் புன்னகை', 'மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அஹமத். இவர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'இறைவன்'. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் தற்போது 'இறைவன்' படக்குழுவினர் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். அதன்படி, இப்படத்தின் இரண்டாவது பாடலான 'இது போல' பாடலின் லிரிக் வீடியோ நாளை (செப்டம்பர் 16) மாலை 5.05 மணிக்கு வெளியாகும் என படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.

'இறைவன்' திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4