சீனாவில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு
#China
#Death
#Accident
#world_news
#Crash
#2023
Mani
1 year ago

சீனாவின் ஜியான்யாங் மாகாணத்தில் உள்ள துவோ ஆற்றின் மீது பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று வழக்கம் போல் பணி நடந்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக ராட்சத டவர் கிரேன் சரிந்து விழுந்தது.
இதில் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.



