தமிழர் பகுதியில் 6 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு
#SriLanka
#Batticaloa
#Death
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Kanimoli
2 years ago
தமிழர் பகுதியில் 6 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியபோரதீவு பகுதியில் காயங்களுக்குள்ளான நிலையில் 6 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலம் நேற்றைய தினம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் பொதுச்சந்தை வீதி, பட்டாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான தங்கராசா திஸவீரசிங்கம் எனத் தெரிய வந்தள்ளது.
உயிரிழந்தவர் நீண்ட காலமாக மனைவி மற்றும் பிள்ளைகளைப் பிரிந்து தனிமையில் தனது சகோதரியின் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.
அவரது மரணத்திற்கான காரணம் வெளியாகாத நிலையில் இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்