இந்திய கடற்படையின் போர்க்கப்பல் இலங்கை விஜயம்!

#India #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
இந்திய கடற்படையின் போர்க்கப்பல் இலங்கை விஜயம்!

இந்திய கடற்படையின் போர்க்கப்பலான 'INS Nireekshak' உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.

கப்பலின் தளபதியான சிடிஆர் ஜீது சிங் சௌஹான் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (14.09) காலை கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த குறித்த போர் கப்பலானது, செப்டம்பர் 21 வரை நாட்டில் தங்கியிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில், இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையிலான நட்புறவை மேம்படுத்தும் வகையில் டைவிங் பயிற்சி மற்றும் திருகோணமலை மக்களுக்கான மருத்துவ முகாம்களை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!