புட்டினுக்கு அழைப்பு விடுத்த கிம்-ஜொங்-உன்!

#world_news #Russia #NorthKorea #Lanka4 #Putin #sri lanka tamil news
Thamilini
2 years ago
புட்டினுக்கு அழைப்பு விடுத்த கிம்-ஜொங்-உன்!

வடகொரியாவுக்கு வருகை தருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) ஏற்றுக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்  அண்மையில் ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். இதன்போதே மேற்படி அழைப்பை விடுத்துள்ளார். 

ரஷ்ய-வடகொரிய நட்பின் வரலாற்றையும் பாரம்பரியத்தையும் முன்னெடுத்துச் செல்வதில் தமக்கு உள்ள ஆர்வத்தைத் புட்டின் மறுவுறுதிப்படுத்தியதாக வடகொரிய செய்தி நிறுவனம் ஒன்றும் தெரிவித்துள்ளது. 

அத்துடன் ரஷ்யா தனது எதிரிகளிடமிருந்து "மாபெரும் வெற்றி" பெறும் என்று தாம் உறுதியாய் நம்புவதாக கிம், ரஷ்ய அதிபரிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

உலக நாடுகளால் தனித்து விடப்பட்டுள்ள இரு நாடுகளின் இந்த சந்திப்பானது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!