பகடிவதை தொடர்பில் அறிவிப்பதற்கு விசேட தொலைப்பேசி இலக்கம் அறிமுகம்!
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
#University
Thamilini
2 years ago
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பில் முறையிடுவதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசி இலக்கமானது 24 மணித்தியாலங்களும் செயல்பாட்டில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டள்ளது.
இதன்படி 076 54 53 454 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு வட்ஸ் அப் மூலம் தகவல்கள் அல்லது முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும். குறிப்பாக காணொலிகளாகவோ, அல்லது படங்களாகவோ கூட அனுப்ப முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 1997 எனும் துரித அழைப்பு இலக்கத்திற்கும் இது தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.