வடக்கு மக்களுக்காக யாழில் இருதய சிகிச்சை நிலையம் கட்ட திட்டமிடும் தியாகேந்திரன் வாமதேவா
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Kanimoli
2 years ago
வடக்கின் இருதய சிகிச்சை மேம்பாட்டுக்காக சர்வதேச தரம்வாய்ந்த நிலையத்தை உருவாக்குவதற்கான காணியை அண்மையில் கொள்வனவு செய்திருக்கிறார் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் தியாகி தியாகேந்திரன் வாமதேவா அவர்கள்.
தற்போது பரந்தளவில் செயற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் பலதரப்பட்ட மக்களுக்கான பாரிய செயற்திட்டங்கள், கட்டுமானங்கள் முடிவுறும் தறுவாயில் இதை ஆரம்பிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
23-8-2023 அன்று இராசேந்திரம் நாகேஸ்வரன் இயற்கை எய்தியதன் காரணமாக அவரின் குடும்பத்தில் நிலவிய வறுமை காரணத்தாலும் அன்னாரது உடலை தகுந்த முறையில் அடக்கம் செய்ய தியாகேந்திரன் வாமதேவா அவர்கள் 1 இலட்சம் ரூபாவை வழங்கி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.