தடம் புரண்டது உடரட்ட மெனிகே

#SriLanka #Colombo #Badulla #Train
Prathees
2 years ago
தடம் புரண்டது உடரட்ட மெனிகே

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட்ட மெனிகே புகையிரதம் தலவாக்கலை வட்டகொட நிலையத்திற்கு அருகில் (13) பிற்பகல் தடம் புரண்டதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

 அந்த புகையிரதத்தின் இயந்திரம் மாத்திரம் சேதமடைந்துள்ளதாகவும், அந்த புகையிரத பாதையில் ஓடும் புகையிரதங்களை நிலையத்தின் மற்றைய புகையிரத பாதையில் இயக்க முடியும் எனவும் வட்டகொட புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 தடம் புரண்ட உடரட்ட மெனிகே ரயிலின் இயந்திரம் அகற்றப்பட்டு புகையிரத நிலையத்தின் நடைமேடை ஒன்றில் நிறுத்தப்பட்டது.

 குறித்த ரயிலில் பயணம் செய்தவர்களை பதுளை நோக்கி பயணித்த விசேட புகையிரதத்தின் ஊடாக அவர்களது இலக்குக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

 கவிழ்ந்த ரயில் என்ஜினை ஏற்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!