பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

#Lanka4 #students #sri lanka tamil news #University
Thamilini
2 years ago
பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அழைப்பு இன்று (14.09) முதல் மேற்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என அதன் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். 

WWW.UGC.AC.LK என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பங்களை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அக்டோபர் 05 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சை முடிவுகள் கடந்த 04ஆம் திகதி வெளியிடப்பட்டன. 263,933 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்த நிலையில், அவர்களில் 166,938 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!