அங்கவீனம் அடைந்த முப்படைகளின் உறுப்பினர்களுக்கு வாழ்நாள் கொடுப்பனவு!

#SriLanka #War #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
அங்கவீனம் அடைந்த முப்படைகளின் உறுப்பினர்களுக்கு வாழ்நாள் கொடுப்பனவு!

யுத்தம் காரணமாக அங்கவீனமடைந்த முப்படைகளின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்குவாழ்நாள் கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

சேவை அங்கத்தவர் 55 வயதிற்கு முன்னர் இயலாமையின் நேரடி விளைவாக இறந்தார் என மருத்துவ சபை உறுதிப்படுத்தினால், இந்த கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடியும். 

இவ்வாறு உறுதி செய்ய முடியாத நபர்களுக்கு அனைத்து கொடுப்பனவுகளும் உரித்தானவை அல்ல எனவும் விதவை மற்றும் அனாதை ஓய்வூதியம் மாத்திரமே உரித்துடையது எனவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலைமையினால் சிரமத்திற்குள்ளாகும் விதவைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.  

இந்த கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் அங்கவீனமுற்ற இராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த சில தரப்பினர் முயற்சிப்பதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!