இன்றும் வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கும் ரயில் ஊழியர்கள்!

#SriLanka #Lanka4 #Train #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன்றும் வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கும் ரயில் ஊழியர்கள்!

ரயில் ஊழியர்கள் இன்றும் (13.09) பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுக்கின்ற நிலையில், பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு  50 ரயில்களை இயக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி  கொழும்பு கோட்டைக்கு காலை நேரத்தில், 15 புகையிரத பயணங்களும், புத்தளம் மார்க்கத்தில் இருந்து கொழும்புக்கு காலை நேரத்தில்  04 புகையிரத பயணங்களும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  

களனிவெளியில் இருந்து கொழும்பு கோட்டை வரை 4 புகையிரத பயணங்களும், கரையோரப் பாதையில் 17 புகையிரத பயணங்களும் நடத்தப்படும் என அறவிக்கப்பட்டுள்ளது. 

அலுவலகத்திற்கு செல்லும் பயணிகளுக்காக தூர மாகாணங்களில் இருந்து கொழும்பு கோட்டைக்கு இரவு நேர அஞ்சல் ரயிலை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.  

இது குறித்து கருத்து தெரிவித்த ரயில்வே போக்குவரத்து துணை பொது மேலாளர் எம்.ஜே. இண்டிபோலகே, புகையிரத சாரதிகளால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடர்கிறது.

எனினும் சாரதிகள் தற்போது கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் பல ரயில் பயணங்களை நடத்துவதற்கு ரயில்வே திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.அதன்படி இன்று காலை 50 ரயில் பயணங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இன்று வேலை நிறுத்தம் முடிவடைந்து வேலைக்குச் செல்வார்கள் என்று நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!