சர்வதேச அரங்கில் கவனம் பெற்ற கிம்மின் ரஷ்ய விஜயம் : கூர்ந்து கவனிக்கும் தென்கொரியா!
#Russia
#NorthKorea
#Lanka4
#SouthKorea
#sri lanka tamil news
Thamilini
2 years ago
வடகொரிய ஜனாதிபதி கிம்-ஜோங்-உன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திப்பதற்காக உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்த விடயம் சர்வதேசஅரசியல் அரங்கில் கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில், கிம் ஜாங் உன்னின் ரஷ்ய பயணத்தை தென் கொரியா உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தென் கொரியாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லிம் சூ-சுக், பயணம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. "எந்த ஒரு ஐ.நா. உறுப்பு நாடும் வட கொரியாவிற்கு எதிரான பாதுகாப்பு கவுன்சிலின் தடைகளை மீறி ஆயுத வர்த்தகத்தில் ஈடுபடக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் சர்வதேச சமூகத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு குழிபறிக்கும் வட கொரியாவுடன் ராணுவ ஒத்துழைப்பில் நிச்சயமாக ஈடுபடக்கூடாது" என்றும் அவர் கூறியுள்ளார்.