ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் உக்ரைன் விஜயம்!

#world_news #Ukraine #Lanka4 #sri lanka tamil news #Germany
Thamilini
2 years ago
ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் உக்ரைன் விஜயம்!

ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர், திடீரென உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு வருகை புரிந்துள்ளார்.  

ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான Annalena Baerbock இன்று (12.09) காலை உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு திடீர் விஜயம் செய்துள்ளார். 

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியபின், அவர் கீவ் நகருக்கு வருவது இது நான்காவது முறையாகும்.  

மிகப்பெரும் தைரியம் மற்றும் மன உறுதியுடன், உக்ரைன் நம் எல்லாருடைய சுதந்திரத்துக்காகவும் கூட போராடிவருகிறது என்று அவர் கூறியுள்ளார். உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு உதவவும் உறுதியளித்துள்ளார். 

எவ்வாறாயினும் Annalenaவின் உக்ரைன் விஜயம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!