ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் மாற்றம்!

#SriLanka #Sri Lanka President #SLPP #Tamilnews #sri lanka tamil news #srilankan politics
Mayoorikka
2 years ago
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின்  பொதுச்செயலாளர் பதவியில் மாற்றம்!

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு தற்காலிகமாக நாடாளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த மித்ரபால நியமிக்கப்பட்டுள்ளார்.

 நேற்று இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அவசர மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

 கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கட்சியிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னர் முதன் முறையாக இன்றைய தினம் மத்திய செயற்குழு கூடியிருந்தது. 

தம்மை கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கும் தலைவர் மைத்ரிபால சிறிசேனவின் தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி மனுவொன்றை தாக்கல் செய்திருந்த நிலையில், அதனை நீதிமன்றம் நிராகரித்தது. 

அத்துடன், பதில் பொதுச்செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்ட சரத் ஏக்கநாயக்க அந்த பதவியில் செயற்படுவதற்கு நீதிமன்றம் தடைப்பிறப்பித்தது.

 இவ்வாறான சூழலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!