ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் இன்று!

#SriLanka #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் இன்று!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் இன்று (10.09) கட்சி  தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடவுள்ளது. 

கொழும்பு,  டார்லி வீதியிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. அதாவது பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர  இடைநிறுத்தப்பட்டதுடன்,  அவரது உறுப்புரிமையும் நீக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையிலேயே கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளமை சுட்டிக்காட்டதக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!