ஜி20 மாநாட்டில் இலங்கை போன்ற நாடுகளின் கடன் நெருக்கடிக்கு தீர்வு காண இணக்கம்!

#India #SriLanka #America #Tamilnews #sri lanka tamil news #money
Mayoorikka
2 years ago
ஜி20 மாநாட்டில் இலங்கை போன்ற நாடுகளின் கடன் நெருக்கடிக்கு தீர்வு காண இணக்கம்!

இலங்கை கானா போன்ற நாடுகளின்கடன் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவதற்கு ஜி20 நாடுகளின் தலைவர்கள் இணங்கியுள்ளனர்.

 வெள்ளை மாளிகை அறிக்கையொன்றில்இதனை தெரிவித்துள்ளது. ஜி20 நாடுகள் அர்த்தபூர்வமான கடன் நிவாரணத்தை வழங்கவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

 இதன் மூலம் கடந்த வருடங்களில் தொடர்ச்சியாக எதிர்கொண்ட பொருளாதார அதிர்ச்சியிலிருந்து மீள முயலும் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகள் மீண்டும் தங்களை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் தங்களின் மிக முக்கியமான தேவைகளில் முதலீடு செய்ய முடியும் எனவும் பைடன் தெரிவித்துள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

 இலங்கை கானா போன்ற நாடுகளின் தொடரும் கடன் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான தங்களின் முயற்சிகளை இரட்டிப்பாக்குவதற்கு புதுடில்லியில் தலைவர்கள் தங்கள் அர்ப்பணிப்பை வெளியிட்டனர், உலக வங்கி சர்வதேச நாணயநிதியத்தின் கூட்டங்களில் அர்த்தபூர்வமான முன்னேற்றத்தை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதிபைடன் தெரிவித்தார் எனவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!