உக்ரைனின் டிரோன் தாக்குதலை ரஷ்யா முறியடித்தது

#world_news #Russia #Ukraine #War #GunShoot #Breakingnews #ImportantNews #Russia Ukraine
Mani
2 years ago
உக்ரைனின் டிரோன் தாக்குதலை ரஷ்யா முறியடித்தது

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதல் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. இதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதி உதவி உள்ளிட்ட உதவிகளை வழங்கினர். 18 மாதங்களை தாண்டியும் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் சமீப காலமாக இரு தரப்பினரும் அடிக்கடி டிரோன் தாக்குதல் நடத்துகின்றனர். அதன்படி ரஷியாவின் பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது.

இதனை ரஷிய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. முன்னதாக கிரீமியா அருகே உள்ள கருங்கடல் பகுதியில் உக்ரைனின் 8 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4