கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்றும் தொடர்வு!
#SriLanka
#Court Order
#Mullaitivu
#Tamilnews
#sri lanka tamil news
Mayoorikka
2 years ago
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று ஐந்தாவது நாளாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனித புதைகுழி அகழ்வுப் பணியானது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
தொல்பொருள் துறை சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் பொலிஸார் உள்ளிட்ட தரப்பினரால் குறித்த அகழ்வு பணிகள் இடம்பெறுகின்றன
இதற்கமைய இன்று திங்கட்கிழமை(11) ஐந்தாவது நாளாக இன்றும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன
இதுவரை துப்பாக்கி சன்னங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்க தகடு உடைகள் உள்ளிட்ட சாண்றுப்பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,