கொக்குத்தொடுவாய் புதைக்குழியில் இருந்து இரு முழுமையான எலும்புக்கூடுகள் மீட்பு!

#SriLanka #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
கொக்குத்தொடுவாய் புதைக்குழியில் இருந்து இரு முழுமையான எலும்புக்கூடுகள் மீட்பு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழியில் இருந்து இரண்டு சடலங்களின் முழுமையான எலும்புக்கூடுகளை தடயவியல் நிபுணர்கள் மீட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

குறித்த எலும்புக்கூடுகள் சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளன. அதேபோல் 03 சடலங்களின் உடைந்த எலும்புக்கூடுகள் கடந்த வியாழக்கிழமை (07.09) மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

அத்துடன், பாதுகாப்பு படையினரின் சீருடைக்கு நிகரான உடைகளின் துண்டுகள், இராணுவ மோதல்களின்போது விடுதலைப்புலிகள் பயன்படுத்திய தேய்ந்துபோன பேட்ஜ் மற்றும், தோட்டாக்கள் ஆகியவையும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

இந்த எலும்புக்கூடுகள் பெண்களுடையதாக இருக்கலாம் என அகழ்வாராய்ச்சியாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதற்கிடையில் இது வெகுஜன புதைக்குழு என்று பாதுகாப்பு படையினர் கருதுகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!