கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 2787 கன அடி தண்ணீர் திறப்பு

#India #Tamil Nadu #Tamil People #people #Rain #Tamilnews #River #Karnataka
Mani
2 years ago
கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 2787 கன அடி தண்ணீர் திறப்பு

இன்று காலை கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 3686 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் அணையில் இருந்து வினாடிக்கு 1687 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணையின் முழு கொள்ளளவான 124.80 அடியில் தற்போது நீர்மட்டம் 98.06 அடியாக உள்ளது. மேலும், இன்று காலை கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4726 கன அடியாக இருந்தது.

அணையில் இருந்து தற்போது வினாடிக்கு 1100 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் முழு கொள்ளளவு 84 அடியில் தற்போதைய நீர்மட்டம் 75.82 அடியாக உள்ளது. மேலும், கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் இன்று காலை 2,787 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4