மட்டக்களப்பு - ஓட்டமாவடி பகுதியில் விபத்து : 13 வயது சிறுமி பலி!

#SriLanka #Batticaloa #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
மட்டக்களப்பு - ஓட்டமாவடி பகுதியில் விபத்து : 13 வயது சிறுமி பலி!

மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் ஓட்டமாவடி புகையிரத கடவைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 13 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

தனியார் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த 13 வயது சிறுமி வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் படுகாயமடைந்து அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துடன் தொடர்புடைய தனியார்  பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் குடிபோதையில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.  

இதேவேளை, ஓமந்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று கெப் வண்டியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!