05 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரவு அபாய எச்சரிக்கை நீட்டிப்பு!

#SriLanka #weather #Lanka4 #Tamilnews
Thamilini
2 years ago
05 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரவு அபாய எச்சரிக்கை நீட்டிப்பு!

நாட்டில் சீரற்ற வானிலை நிலவுகின்ற நிலையில், ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சில நாட்களாக தீவின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணித்தியாலங்களில் கேகாலை, மொரேலியா ஓயா பிரதேசத்தில் 114.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

இதன்காரணமாக  புளத்சிங்கள பகுதியில் ஆறொன்று  பெருக்கெடுத்து ஓடுவதால் பரகொட, நாலியத்த, தம்பலா போன்ற பிரதேசங்களில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன் காரணமாக புலத்சிங்கள மொல்கா பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. 

இந்நிலையில்,  05 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!