கெஹெலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் நிலைப்பாடு!

#SriLanka #Parliament #Keheliya Rambukwella
Prathees
2 years ago
கெஹெலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் நிலைப்பாடு!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 40 வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. 

 அங்கு நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக 113 வாக்குகளும் ஆதரவாக 73 வாக்குகளும் கிடைத்தன.

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன.

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பிரேணையை எதிர்த்து வாக்களித்தன. தேசிய மக்கள் சக்தி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

 இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோர் தலையிலான அணியினர் பிரேரணையை எதிர்த்தே வாக்களித்தனர்.

குறித்த பிரேரணை தொடர்பில் கடந்த இரண்டு நாட்களும் விவாதம் இடம்பெற்றிருந்த நிலையில்இ இன்று அதன் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!