உக்ரைனுக்கு புதிய 175 மில்லியன் டாலருக்கு ஆயுத உதவி - அமெரிக்கா

#America #Weapons #Russia #Ukraine #War
Prasu
2 years ago
உக்ரைனுக்கு புதிய 175 மில்லியன் டாலருக்கு ஆயுத உதவி - அமெரிக்கா

உக்ரைன், ரஷியா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து நிதி உதவியும், ராணுவ உதவியும் அளித்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைனுக்கு கூடுதலாக 175 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ உதவியை அமெரிக்க அறிவித்துள்ளது. 

இவை உக்ரேனிய படைகள் ரஷிய படைகளின் முன் பகுதியை தாக்க உதவியாக இருக்கும்.

 இந்த தொகுப்பில் ரஷிய விமானங்கள் மற்றும் ராக்கெட்டுகளுக்கு எதிராக செயல்படக்கூடிய வான் ஏவுகணைகள், ஜாவெலின் எதிர்ப்பு கவச ராக்கெட்டுகள் மற்றும் பிற வெடிமருந்துகள் ஆகியவை அடங்கும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4