சிறுமியின் கை விவகாரம்: யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம்
#SriLanka
#Jaffna
#Hospital
#Tamilnews
#sri lanka tamil news
#Girl
Mayoorikka
1 year ago

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சலுக்காகச் சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் கை ஒன்று அகற்றப்பட்ட சம்பவத்திற்கு நீதி வேண்டி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டமொன்று இடம்பெற்று வருகிறது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (07) காலை 9.30 மணியளவில் ஒன்று கூடியவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பந்தப்பட்ட தாதியை பணி நீக்கம் செய், பணிப்பாளரே விசாரணைகளை மூடி மறைக்காதே உள்ளிட்ட கோஷங்கள் இதன்போது எழுப்பபட்டது.
ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மகஜரொன்றை கையளிப்பதற்கு பொதுமக்களிடமும் கையெழுத்து சேகரிப்பு இடம்பெற்று வருகிறது.



