இவ்வருடத்திற்குள்வாகன இறக்குமதி சாத்தியமற்றது ! நிதி இராஜாங்க அமைச்சர்
#SriLanka
#Sri Lanka President
#Minister
#Tamilnews
#sri lanka tamil news
#Import
#vehicle
Mayoorikka
2 years ago
இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள 290 வகையான வாகன இறக்குமதிக்கு இவ்வருட இறுதிக்குள் அனுமதி வழங்குவது என்பது சாத்தியமற்ற ஒன்று என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள ஏனைய பொருட்களுக்கான இறக்குமதி அனுமதி வழங்குவது தொடர்பில் மத்திய வங்கி அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.
பிரத்தியேக பாவனைக்காக அல்லாது ஏனைய தேவைகளுக்காக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்படவுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
முன்னதாக, இதற்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை இவ்வருட இறுதிக்குள் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தாக செய்தி வெளியானது.