ஏசியன் மாநாட்டில் பங்கேற்க இந்தோனேசியா வந்தடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
#PrimeMinister
#Meeting
#Asia
#2023
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
#NarendraModi
Mani
2 years ago

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெறும் ஆசிய-இந்தியா, கிழக்கு ஆசிய மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து இந்தோனேசியா புறப்பட்டார்.
இந்நிலையில், அவர் இன்று அதிகாலை இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அங்கு குவிந்திருந்த இந்திய வம்சாவளியினர் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.
ஆசியான் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு பிரதமர் மோடி இன்று மாலை இந்தியா திரும்புகிறார். இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெற இருப்பதால் இது குறுகிய பயணமாக அமைந்துள்ளது.



