முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் துமிந்த நாகமுவக்கு CID அழைப்பு
#SriLanka
#Arrest
#Police
#Lanka4
#srilankan politics
Kanimoli
2 years ago
முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் டிஜிட்டல் தடயவியல் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இனை அவமதிக்கும் வகையில் பேஸ்புக் மற்றும் யூடியூப் சேனல்களில் அறிக்கை வெளியிடுவது தொடர்பிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, துமிந்த நாகமுவவை எதிர்வரும் 12ஆம் திகதி காலை 9.00 மணிக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் டிஜிட்டல் தடயவியல் பிரிவில் ஆஜராகுமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
துமிந்த நாகமுவவை விசாரிக்க பொலிஸ் அதிகாரிகள் சென்ற போதிலும், அவர் எங்கும் காணப்படவில்லை என அமைச்சர் திரான் அலஸ் முன்னதாக ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.