மூன்று மாதங்களில் 42 துப்பாக்கிச் சூடு - 22 கொலைகள்
கடந்த மூன்று மாதங்களில் 42 துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பான 22 கொலைகள் இடம்பெற்றுள்ளதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திரு.தேஸ்பந்து தென்னகோன் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் உரையாற்றிய மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன்,
இந்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 9 துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மற்றும் அமைச்சுக்கு 13/07/2023 அன்று அறிக்கை வழங்குவதற்காக விசேட குழுவொன்றை பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நியமித்துள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் மீள் எழுச்சி மற்றும் அது தொடர்பான போதைப்பொருள் கடத்தல் ஒடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது.
குறுகிய காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் நீண்டகாலமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, இது தொடர்பான பரிந்துரைகளை அளித்துஇ காவல்துறை மூலம் செயல்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் 10 வருட வரலாற்றை நாங்கள் ஆய்வு செய்தோம். அடுத்த ஆறு மாதங்களில் கடந்த மூன்று மாதங்களில் 42 துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அதற்குத் தேவையான சில விடயங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் இனங்காணப்பட்டுள்ளது.
அந்த 42 பேரில் 22 கொலைகள். 17 சம்பவங்களில் மக்கள் படுகாயமடைந்துள்ளனர். மூன்று சம்பவங்களில் சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.
இதில் 31 குற்றங்கள் தொடர்பாக துப்பாக்கிச் சூடு நடத்திய 9 பேரை கைது செய்துள்ளோம்.
அந்த 9 பேரில் இருவர் கைது செய்யப்பட்ட போது பொலிஸாருடன் அல்லது பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 7 பேர் பொலிஸ் காவலில் உள்ளதாகத் தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, ஏனைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.