டபுள் டெக்கர் பேருந்துகளை புனரமைக்க நடவடிக்கை - பந்துல குணவர்தன!

#SriLanka #Bandula Gunawardana #Lanka4 #Tamilnews
Thamilini
2 years ago
டபுள் டெக்கர் பேருந்துகளை புனரமைக்க நடவடிக்கை - பந்துல குணவர்தன!

இலங்கை போக்குவரத்து சபை (SLTB) சுற்றுலாத்துறையில் பயன்படுத்துவதற்காக 15 டபுள் டெக்கர் பேருந்துகளை புனரமைத்து மறுசீரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக  போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

இந்த பேருந்துகள்அனைத்தும் தற்போது பழுதுபார்க்க வேண்டிய நிலையில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். 

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், "சுற்றுலாத் துறையில் பயன்படுத்த அவற்றை நாங்கள் சரிசெய்வோம். யாத்ரீகர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் முச்சக்கரவண்டி நடத்துனர்களின் ஏகபோகத்தை முறியடிக்கும் வகையில் அனுராதபுரம் புகையிரத நிலையத்திற்கும் புனித நகரத்திற்கும் இடையில் பயணிகள் போக்குவரத்திற்காக இரண்டு பேருந்துகள் பயன்படுத்தப்படும்” என்று கூறியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!