கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள திட்டமிடும் இலங்கை : புதிய ஒப்பந்தங்கள் எட்டப்படலாம்!
#SriLanka
#Lanka4
#IMF
Thamilini
2 years ago
சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது 3 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் திட்டத்தின் முதல் மீளாய்வை மேற்கொள்வதால், இந்த மாதம் தனது கடன் மறுசீரமைப்பில் முக்கிய ஒப்பந்தங்களை உருவாக்குவதற்கு இலங்கை எதிர்பார்க்கிறது என சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி வரிச் திருத்தச் சட்டமூலம் ஒன்றை நிறைவேற்றி அதன் மூலம் சட்டத் தடையை நீக்கி உள்நாட்டு பத்திரப் பரிமாற்றத்தை செப்டம்பர் மாதத்தின் நடுப்பகுதிக்குள் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த விடயம் சம்பந்தமாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க முன்னதாக அறிவித்திருந்தார்.
இதற்கிடையில், இந்த மாதத்தில் வெளிநாட்டு கடனை எவ்வாறு மறுசீரமைப்பது என்பது குறித்து அதிகாரிகள் உடன்பாட்டை எட்டுவார்கள் என்றும் அவர் கூறினார்.