கார் ஒன்று 05 வாகனங்களுடன் மோதி விபத்து - ஒருவர் பலி, அறுவர் காயம்!
#SriLanka
#Accident
#Lanka4
Thamilini
2 years ago
அம்பிலிபிட்டிய கல்வங்குவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 06 பேர் காயமடைந்துள்ளனர்.
கார் ஒன்று 03 முச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்களில் மற்றும் மற்றுமொரு காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 73 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 06 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குடிபோதையில் சாரதி காரை செலுத்தியதே விபத்துக்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.