கொழும்பு கோட்டை - சிலாபத்திற்கு இடையிலான ரயில் சேவைகள் இன்று முதல் வழமைக்கு!
#SriLanka
#Train
#service
#Disaster
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
புத்தளம் ரயில் பாதையில் கொழும்பு கோட்டைக்கும் சிலாபத்திற்கும் இடையிலான ரயில் சேவைகள் இன்று (29) முதல் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
ரயில் பாதையின் சேதமடைந்த பகுதியை சரிசெய்யும் பணிகள் நிறைவடைந்ததால் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாத இறுதியில் இலங்கையை பாதித்த பாதகமான வானிலை காரணமாக, புத்தளம் ரயில் பாதையில் குடா வேவா மற்றும் மாதம்பே ரயில் நிலையங்களுக்கு இடையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதன் விளைவாக கொழும்பு கோட்டை மற்றும் சிலாபம்/புத்தளம் இடையேயான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
