வவுனியாவில் சேற்றில் புதைந்த யானை - மீட்கும் பணிகள் தீவிரம்
#SriLanka
#Vavuniya
#Elephant
#Rescue
Prasu
2 years ago
வவுனியா மாமடு குளத்தின் நீரேந்து பகுதியில் சேற்றினுள் புதையுண்ட யானையினை மீட்கும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த மீட்பு நடவடிக்கையானது இன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,வவுனியா மாமடு குளத்தின் நீரேந்து பகுதியிலே மாடு மேய்க்க சென்ற கிராமவாசி ஒருவர், புதையுண்ட நிலையில் யானை ஒன்று உயிருக்கு போராடுவதை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து, மாமடு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் யானையினை மீட்பதற்கான நடவடிக்கையினை வனஜீவராசிகள் திணைக்களம், பொலிஸார், மற்றும் கிராமமக்கள் இணைந்து முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.