மஹாஓயா பகுதியில் சடலம் ஒன்று மீட்பு!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
மஹாஓயா, தம்பதெனிய பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் தேக்கவத்தை, மஹாஓயா பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபருக்கும், அவர் உயிரிழந்த காணியில் வசிக்கும் பெண் ஒருவருக்கும் இடையில் தொடர்புள்ளதாக பொலிஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மஹாஓயா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.