600 இலட்சம் ரூபாவை மோசடி செய்த இருவர் கைது!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
காணிக்கான போலி உறுதிப்பத்திரங்களை தயாரித்து வர்த்தகர் ஒருவரிடம் அடகு வைத்து 600 இலட்சம் ரூபாவை மோசடி செய்ய உதவிய இருவரை நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
தம்புள்ளையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் செய்த முறைப்பாட்டிற்கு அமைய குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும், மற்றுமொரு நபருடன் சேர்ந்து, போலி பத்திரங்களை தயாரித்து, தம்புள்ளையில் உள்ள இரண்டு காணிகளை சம்பந்தப்பட்ட வர்த்தகரிடம் அடமானம் வைத்துள்ளது விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.