லான்சாவின் கூட்டணியில் இணைய சுதந்திரக் கட்சி இரகசியப் பேச்சு
#SriLanka
#Maithripala Sirisena
#srilanka freedom party
Prathees
2 years ago
நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா உள்ளிட்ட குழுவினால் உருவாக்கப்பட்ட புதிய அரசியல் கூட்டணியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அந்தக் குழுவினருக்கும் இடையில் அண்மையில் இரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த குழுக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இடையூறாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஈடுபட்டுள்ளவர்களின் பதவிகளை மாற்றுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.