போரினால் கண் இழந்து, அங்கங்களை இழந்தவர்களுக்கு உதவ வாருங்கள்!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட “ஒளிரும் வாழ்வு” மாற்றுத்திறனாளிகள் அமைப்பானது, எமது உறவுகளிடம் உதவிகோரி அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பானது, 11 பேர் கொண்ட நிர்வாக சபையையும், 06 பேர் கொண்ட ஸ்தாபகர் சபையினையும் கொண்டு இயங்குகிறது.
அத்துடன் ஞானக்குழந்தைகள் பகல் பராமரிப்பு நிலையத்தின் மூலம், 25 மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கான செயல்திறன் கல்வியையும் போதித்து வருகிறது. இதற்காக இவர்களுக்கு மாதாந்தம் 5 இலட்சம் ரூபாய் செலவாகுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எங்களுடைய உறவுகளின் உதவியை எதிர்பார்த்து நிற்பதாகவும், அனைவரிடமும் உதவி கோர முடியாத நிலையில், நிலையான வைப்பின் ஊடாக தீர்வுகாண முயற்சித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
