மினுவாங்கொட ஜாஎல வீதியில் விபத்து : இருவர் பலி!
#SriLanka
#Accident
#Lanka4
Thamilini
2 years ago
மினுவாங்கொட ஜாஎல வீதியின் அம்பகஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் இன்று (02.09) பதிவாகியுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்று கன்டெய்னர் ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் குறித்த கன்டெய்னருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் அவரது 15 வயது மகளும் பலியாகியுள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.