இலங்கையின் எட்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

#SriLanka #Rain #Lanka4
Thamilini
2 years ago
இலங்கையின் எட்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில்  100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பொழிய கூடும் என வானிலை அவதான திணைக்களத்தின் இயற்கை அபாய முன்னெச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

இலங்கை  முழுவதும் தென்மேற்கு பருவமழை செயலில் உள்ளதால், தீவின் தென்மேற்கு பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதன்படி, கம்பஹா, கேகாலை, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களுக்கு அதிக அபாய நிலை (சிவப்பு) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

எனவே, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!