போராட்டத்திற்காக தயார்படுத்தப்படும் இளைஞர்கள்: புலனாய்வு அமைப்புகள் தகவல்
#SriLanka
#Protest
Prathees
2 years ago
18-20 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கான அதிநவீன வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக புலனாய்வு அமைப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.
அங்கி அணிந்தவர்கள் போராட்டம், ஆர்ப்பாட்டம் என பல்வேறு அரசியல் நடவடிக்கைகளில் கேடயமாக பயன்படுத்த தயாராக இருப்பதாகவும் ஐநூறுக்கும் மேற்பட்டோர் இவ்வாறு பயிற்சி பெற்று பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் அரசியல் கட்சி இருப்பதாகவும் புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இதன் மூலம் அவர்களது அரசியல் கருத்தியலை பரப்பும் வேலைத்திட்டம் ஒன்றும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.